திங்கள், 5 மார்ச், 2012

இரண்டாம் தாயே!!

1.
உறவென்று யாருமற்ற
என் நீண்ட இரவுகளில்..
'தனிமை ' - என்றொரு
ஒற்றைசொல்லை
வாழ்ந்துவிட 'துணிவு'
எனக்கில்லை..

இலைகள் உதிர்ந்த
காலம்போல் - என் வாழ்வை
எண்ணியிருந்த காலம் அது..

என் இரவு வானிலே
ஒளிவீசிட
நிலவும், விண்மீன்களும்
இன்றி
கருமை படர்ந்திருந்த
காலம் அது..

2.
இருள் மூடிய
என் வானில்(வாழ்வில்)
ஒளி நிலவென
புகுந்தவள்..


நெருஞ்சி முட்களாய்
போகவிருந்ததை,
புன்னகை பூக்களாய்
மாற்றியவள்..
மாறிவரும்
பருவங்களில்..
வசந்தத்தை மட்டுமே
எனக்காக வீசச்செய்து..
என் மனமென்னும் கூட்டில்
ஊஞ்சல் கட்டி ஆடியவள்.!!

5.
காலமெல்லாம்
காத்திருந்தது போதுமென்றே
என் ஒவ்வொரு
அணுக்களிலும்
காதலென நிறைந்து..
இருவர்
ஒருவரென கலந்தவள்..

இதய வானில்
சிறைகொண்ட தேவதையுடன்
கரம்பற்றி நடந்துபோனேன்!!
எப்போதும் காத்திருக்கும்
அவள் உள்ளங்கையின்
கதகதப்பிலே..
என் உள்ளத்தையே
அள்ளித்தந்த
சிறு குழந்தைபோல்.!!

4.
அவளுக்கான என் இதழ்களில்
எப்போதுமே
சொல்லில் மறைந்த
வார்த்தைபோல,
மெய்யில் மறைந்த
செயலைப்போல,
உயிரில் கலந்த
அன்பென அவளே இருந்தும்..
ஊனமாகிப் போகும்...
என் அன்பை
அவளுக்கு சொல்ல முடியாமல்.

என் இதயத்தில்
எனக்கென இருக்கும்
அவளை எண்ணிய
நொடிகளிளெல்லாம்..
நிரம்பி வழிந்திடும்..
என் கண்களில்!!
இன்ப ஊற்றுக்கள்..

3.
என் இரத்த நாளங்களை
அவளின்
உயிரெனும் நரம்புகளில்
கட்டிய
வீணையென
மீட்டியவள்!!

சிக்கித்தவிக்கும்
நினைவுகளில்,,
வருடிச் செல்லும் மயிலிறகாய்..

என் அங்கத்தில்
ஓரங்கமென..
விடியும் வரை
என் மார்பிலே
தலைசாய்த்து
அவளுறங்க..

சேய் கேட்கும்
தாலாட்டை..
தாயாக
நான் மாறி
தாலேலோதான் பாட வேண்டும்!!
விடியல் கண்டபோதும்
அவளுறக்கம் கலையாமல்
நான் காக்க வேண்டும்ம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக