திங்கள், 5 மார்ச், 2012

மூதுரை



மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.


பொருள் விளக்கம்:

கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்புவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்றுநீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.
என்னும் ஒளவையின் வரிகளுடன்
வணக்கம் நட்புகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக