ஞாயிறு, 25 மார்ச், 2012

பிழையின்றி எழுதிடச் சில விதிகளும் விளக்கங்களும்

நன்றி திரு. அருள் செல்வன். http://learntamilgrammar.blogspot.in/2008/07/blog-post.html


கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் மாணாக்கர்கட்கு பொதுத்தமிழ் பாடமாக உள்ளது. அவர்கள் இலக்கணத் தமிழை நன்கு அறிந்து கொள்ளவும், மொழிப்பயிற்சி பெறவும் சில அடிப்படை விதிகளை அறிதல் நலம்.

வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.

எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.

கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?

இவை போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள் ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.

வேலை செய்தான்
வேலைச் செய்தான்

'வேலை செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும் கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது.


இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.


இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப் ‘புணர்ச்சி’ என்பர்.

புணர்ச்சி என்பதன் விளக்கம்

மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம் 
(பிரிக்க முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும் தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப் பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ, விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: ) 





பூ + கூட்டம் = பூக்கூட்டம்
'பூ' என்பது - நிலைமொழி (நின்ற சொல்)
'கூட்டம்' என்பது - வருமொழி (வருகின்ற சொல்)

'க்' என்ற ஒற்று / மெய் / புள்ளியெழுத்து இவ்விரண்டின் இடையே மிக்கு நின்றது. 'பூக்கூட்டம’¡னது.

வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் - (18 மெய்கள்)

என 3 வகையாக மெய்யெழுத்துக்களமையும். வல்லின மெய்களுள் ட், ற் நீங்கிய பிற நான்கும் (க், ச், த் ப்) 12 உயிரெழுத்துக்களுடன் சேருகின்றன. உயிர்மெய்யாக மாறி சொல்லின் முதலில் வருகின்றன. (ட், ற் என்பன - மொழி முதலில் வாரா).

வருமொழியில் க், ச், த், ப் - வரும்பொழுது எந்த மெய் வருகிறதோ அந்த மெய்க்கு ஏற்ற மெய்யெழுத்து புணர்ச்சியில் மிகுதலை 'வல்லினம் மிகுதல்' என்பர்.

1.1 புணர்ச்சியின் மாற்றங்கள்:

இரு சொற்கள் (நிலை மொழி + வருமொழி) சேருமிடத்துப் புணர்ச்சி மாற்றங்கள் நிகழும். அவ்விடத்து சொற்கள் இயல்பாகப் புணருதலை 'இயல்புப் புணர்ச்சி' என்றும், விகாரமாக/ மாற்றங்களுடன் புணருதலை 'விகாரப் புணர்ச்சி' என்றும் இரு வகைப்படுத்துவர்.

1.1.1 இயல்புப் புணர்ச்சி:

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாது சேருவது இயல்புப் புணர்ச்சி.

உ.ம். வாழை + மரம் = வாழைமரம்
பொன் + மலை = பொன்மலை

1.1.2 விகாரப் புணர்ச்சி:

புணர்ச்சியில், ஓர் (1) எழுத்தோ, சாரியையோ புதிதாகத் தோன்றுதல், (2) வேறுபடுதல் (3) கெடுதல் - என்ற மூன்று நிலைகளில் மாற்றம் பெறலாம். அம்மாற்றம், நிலைமொழி, வருமொழிகளின் முதல், இடை, கடை எனும் மூன்று இடங்களிலும் நிகழலாம். இத்தகைய புணர்ச்சியை 'விகாரப் புணர்ச்சி' என்பர்.

அ. 'தோன்றல் விகாரம்':

நிலைமொழி, வருமொழிகட்கிடையே புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது ‘தோன்றல் விகாரம்’ ஆகும்.

உ.ம். வாழை + பழம் = வாழைப்பழம்
('ப்' - புதிதாகத் தோன்றியது)

ஆ. 'திரிதல் விகாரம்':

இரு மொழிகளிலும் உள்ள எழுத்துக்கள் மாறி வருவது, ‘திரிதல் விகாரம்’.

உ.ம். மண் + குடம் = மட்குடம்
'ண்', 'ட்' ஆகத் திரிந்தது.


இ. 'கெடுதல்' விகாரம்:

இருமொழிகட்கிடையேயான எழுத்து கெட்டுப்பின் சேருவது.

உ.ம். மரம் + வேர் = மரவேர்
'ம்' கெட்டது; பின் சேர்ந்தது.

மேற்சுட்டிய புணர்ச்சி மாற்றங்களில் ஒன்றான 'தோன்றல் விகாரம்' என்பதனை ஒட்டியே நாம் காண இருக்கும் 'வல்லினம் மிகுதல்' அல்லது 'ஒற்று மிகுதல்' அமைகிறது.

வல்லினம் மிகுதலின் விதிகள்:

1. 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே'
(நன். சூத்: 165)
-என்பது இலக்கணவிதி. அதாவது நிலைமொழியில் உயிர் எழுத்துக்கள் இறுதியாக நிற்க, வருமொழி முதலில் கசதப வரின், அவ்விடத்து வந்த வல்லின மெய்கள் மிகுந்து வரும். சிறுபான்மை மிகாமலும் வரும் என்பது பொதுவிதி.

உ.ம். ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்

நிலைமொழி - ஆடூஉ (ஆண்மகன்)
'உ'கரம்* என்பது இதன் இறுதி எழுத்து. அதாவது உயிரீறு.

வருமொழி - குறியன் (சிறியவன்)
(க்+உ = கு)


வருமொழி 'க்' என்ற மெய்யே, இரு சொற்களின் இடையில் மிகுந்து வந்த வல்லின மெய்யாகும். எனவே 'ஆடூஉக்குறியன்' என்றானது இதனை அல்வழிப்புணர்ச்சியில் அடக்குவர்.


உ.ம். செட்டி + தெரு = செட்டித்தெரு
(ட் + இ) (த் + எ)

நிலைமொழியில் 'இ' என்ற உயிரீறு நிற்க, வருமொழியில் 'த்' என்ற மெய்முதல் சேருமிடத்து 'த்' என்ற மெய், இடையே மிகுந்தது. ‘செட்டித்தெரு’ என்றானது, இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.


இவ்வல்லின மெய்கள் உயிரீற்றின் முன் இவ்வாறு புணரும். இனி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பதன் விளக்கம் காணலாம்.



*கரம், காரம் - என்பன சாரியைகள்
கரம் - குறில் எழுத்தையும் ('எ'கரம்), ('உ'கரம்)
காரம் - நெடில் எழுத்தையும் ('ஏ'காரம்), ('ஐ'காரம்) சுட்டுவன.



1.1 புணர்ச்சியின் வகைகள்

வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இருவகையாகப் புணர்ச்சியைக் குறிப்பர்.

உ.ம். 'கடவுட் கருணை' - வேற்றுமைப் புணர்ச்சி
‘கடவுள் கருணை செய்தார்’ - அல்வழிப் புணர்ச்சி

இவை எவ்விதம் வேறுபட்டன?

'ஐ' முதல் 'கண்' வரை உள்ள வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வருமாறு சொற்கள் புணருதல், 'வேற்றுமைப் புணர்ச்சி'.

வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணருதல் 'அல்வழிப் புணர்ச்சி'.

1.2 தொகையும் விரியும்:

வேற்றுமைஉருபுகள் மறைந்து வந்தால் 'வேற்றுமைத் தொகை' என்றும்; மறையாமல் வெளிப்படையாக வந்தால் 'வேற்றுமை விரி' என்றும் கூறுவர்.

வேற்றுமைத் தொகை
வேற்றுமை விரி

நிலங்கடந்தான் ('ஐ' - மறைந்தது)
'நிலத்தைக் கடந்தான்'
('ஐ' - வெளிப்படை / விரிந்தது)
கல்லெறிந்தான் ('ஆல்' மறைந்தது) 
'கல்லால் எறிந்தான்'
('ஆல்' / வெளிப்படை)
கொற்றன் மகன் ('கு' - மறைந்தது)
'கொற்றனுக்கு மகன்'
('கு' - வெளிப்படை)
மலை வீழருவி ('இன்' - மறைந்தது)
மலையின் வீழருவி
('இன்' - வெளிப்படை)
சாத்தன் கை ('அது' - மறைந்தது)
சாத்தனது கை
('அது' - வெளிப்படை)
குன்றக்குகை ('கண்' - மறைந்தது)
குன்றத்தின் கண் குகை
('கண்' - வெளிப்படை)

1.3 வேற்றுமையாவது யாது?

பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம்.

உ.ம். 'அமுதன் கொடுத்தான்' - எம்மாற்றமும் இல்லாத எழுவாய்த்தொடர்.
'அமுதனுக்குக் கொடுத்தான்' - மாற்றமுள்ள தொடர்.

பொருள் மாற்றம் தரும் எழுத்தான 'கு' என்பது வேற்றுமை உருபாகும். 

என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு.... ~ !♔ மதியோடை ♔!

என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு.... ~ !♔ மதியோடை ♔!

சனி, 10 மார்ச், 2012

எனக்கு பிடித்த பாடல்கள்: கிளி பேச்சு கேட்க வா (1993) - அன்பே வா அருகிலே

எனக்கு பிடித்த பாடல்கள்: கிளி பேச்சு கேட்க வா (1993) - அன்பே வா அருகிலே: பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் இசை: இளையராஜா பாடலாசிரியர்: வாலி அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை எங்கே என் தேவதை தே...

எனக்கு பிடித்த பாடல்கள்: கிழக்கு சீமையிலே (1993) - ஆத்தங்கர மரமே

எனக்கு பிடித்த பாடல்கள்: கிழக்கு சீமையிலே (1993) - ஆத்தங்கர மரமே: பாடியவர்கள்: மனோ, சுஜாதா இசை: A.R.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடைத் த...

புதன், 7 மார்ச், 2012

முதல் முதல் இரசனை

சிட்டுக்குருவிகள்
கொஞ்சல்மொழிகேட்டு
புலரும் பொழுது..
சோம்பல் முறித்தெழுந்த
பகலவனோடு தென்றலும்
பூமணம் வீசி
எட்டுத்திக்கும் சென்றாலும்
வழிமாறி செல்லாமல்
வந்தே செல்லும்
என் வீட்டுத் தோட்டத்திற்கும்...

இவைசெல்லும் வழியெங்கும்
பின்தொடர்ந்தாலும்
விட்டுச்செல்லும் சுகந்தம்
எனைத் ஹ்டோட்டும் சென்றிடும்..

கரும்புக்காட்டின் மேலே
மின்கம்பம், கம்பிகளுக்கிடையே
கலைவண்ணம் மிகக்
கட்டியிருக்கும்
தூக்கணாங்குருவிக் கூடு..

கரும்பின் பூ வீசும்
கொள்ளை அழகிலே
சிறகுவிரித்து பறக்கும்
பறவை என்றேன்னியே
காதல் மொழிகொண்டு
கவிதைபேசிடும் குருவியும்..

வீட்டருகிலே..,


இடிந்துபோன வீட்டில்
குடியிருந்திடும்..
கூடுகட்டி அந்த அழகு
சிட்டுக்குருவி..


ஆயாவின்
சேலைகட்டி கிணற்றிலே
நீச்சல் பழகியிருந்தாலும்
கிணற்றுக் கற்படியை பிடித்தே
நீந்தியிருப்போம்..

இட்டிலித் தட்டிலே,
மாவோடே வெந்திருந்தாலும்
ஒருநாளும்
இட்டிலியோடு வந்ததில்லை
தாத்தாவின் பழம்வேட்டி..


சமையலரைக் கொட்டாயின்
சருகுகளும் புகைபிடிக்கும்..
சிறார்கள் கவ்விவிடும்
பனிப்புகைபோல்..

எம்மை விட்டு இன்னும்அகலவில்லை..
என்சிறு பால்யத்தின் ஞாபகம்.. 
நீளும்..

JOKE


ஆள்1: எப்படி வெயிலடிக்குது தெரியுமா?

ஆள்2: எப்படி.. வலிக்கிற மாதிரியா?

பொன்மொழி

மன நிறைவு என்பது
இயற்கையாகவே
நம்மிடம்
உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது
நாமே தேடிக்கொள்ளும்
வறுமை.
- சாக்ரடீஸ் 

செவ்வாய், 6 மார்ச், 2012



[தொகு]ஓரெழுத்து ஒரு மொழி
உயிரெழுத்து

அ = 8

8 என்பதன்கைக் குறி

பொருள்
(பெயர்ச்சொல்): அ

1) தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து ,
2) எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு,
3) அழகு,
4) அந்த என்னும் சுட்டு) (எ.கா. அப்பறவை, அக்கருவி)
5) எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிகளிலிருந்து பெற்ற பிற்கால அமைப்பு; ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
6) ஓர் அசைச்சொல். (எ.கா.)(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி-494)
7) ஓர் இரக்கக் குறிப்பு.(எ.கா.) ' அஆ! கீழே கொட்டி விட்டதே. '8) ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று. (எ.கா.) என கைகள்.
9) அஃகான்.
10) சிவன், திருமால்.

இந்தி- இதே ஒலியை உடைய இந்தியின் முதலெழுத்து - अ

விளக்கம்
ஆரிய மொழிகளிலிருந்து பெற்ற "அ" என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே வழங்குவது;

சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்.

1.நீதி X அநீதி
2.சைவம் X அசைவம்
3.சுத்தம் X அசுத்தம்
4.தர்மம் X அதர்மம்

பயன்பாடு:

அ என்பது தமிழின் முதலாம் உயிரெழுத்து ஆகும்.
(இலக்கணப் பயன்பாடு)
அ என்பது, ஒரு பெயர்ச்சொல், அசைச்சொல், மற்றும் குறில் ஆக அமைகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
அ என்ற சொல்லால் ஆரம்பமாகும் திருக்குறள்கள், மொத்தம் = 156.
இது தமிழ் அரிச்சுவடியில் அடங்கும், அடிப்படைக் குறியீடாகும்.

*****************************

”ஆ”


பொருள்:
1.இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.
2.பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
3.வலிக்கான குறிப்பொலி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்:
(ஆங்):
the second tamil vowel
cow
oh!

(இந்தி):
आ- ஆஒலியிலான, இந்தியின் இரண்டாவது உயிர்எழுத்து ஆகும்.
गो, गौ, गाय
आह, हा (குறிப்பொலி)

விளக்கம்:
• • (இலக்கணக் குறிப்பு)இது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
• • ஆவின் பால் = பசுவின் பால்.
• • இது தமிழ் அரிச்சுவடியில் உள்ளது.
• • ஆ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =21

***
"இ"
பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், மூன்றாமெழுத்தாகும்.
விளக்கம்.
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =113 .அவற்றினை இங்கு காணலாம்.

***
 பொருள்.
  • அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.
  • வண்டு.
  • அழிவு.
  • தேனீ
  • அம்பு
  • அரைநாள்
  • பாம்பு
  • கொடு
  • இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும்.
விளக்கம்.
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =8 .அவற்றினை இங்கு கா

 
பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில்,ஐந்தாமெழுத்தாகும்.
விளக்கம்.
  • ( இலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =81 
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஆறாமெழுத்தாகும்; மூன்றாவது நெடில் உயிரெழுத்து (ஆ, ஈ, ஊ)
  • ஊ < ஊன் "ஊன்உடம்பு ஆலயம்" - திருமந்திரம் (ஒப்புநோக்குக ஆ < ஆன், கோ < கோன், மா < மான்)
  • (Tamil writing 4 .gifலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் = 21 .
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஏழாமெழுத்தாகும்.
 பொருள்
  1.  என்பது, உயிர் எழுத்துக்களில்8வது எழுத்தாகும்.
  2. ஏ = அம்பு (பெயர்ச்சொல்)
  3. ஏ = ஏவு (வினைச்சொல்)
  4. ஏ - (இடைச்சொல்)
  5. ஏ = பெருமை "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)
  6.  என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.
மொழிபெயர்ப்புகள்
  1. the eighth tamil vowel,
  2. arrow
  3. activate
  4. an addenda in nouns to express the moods of certainty, questioning, negative, clarity, threatening, counting,
  5. the greatness
  6. hey.
விளக்கம்

[தொகு]இடைச்சொல்

  • ஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)
ஈற்றசை
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)
எண்
நிலனே நீரே தீநே வளியே வெளியே
தேற்றம்
அவனேஎ கொண்டான்
பிரிநிலை
அவனே கொண்டான்
வினா
நீயே மொண்டாய்?
  • தெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13
நீயேஎ கொண்டாய்
  • எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40
தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப
  • எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42
சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.
  • ஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
அன்று ஈற்று ஏ - அன்றே அன்றே
  • ஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
நன்று ஈற்று ஏ - நன்றே நன்றே
  • ஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24
ஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே
  • ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38
கடல்போல் தோன்றல காடு இறந்தோரே

[தொகு]உரிச்சொல்

பொருள்
பெற்று என்னும் பெருமை
இலக்கணம்
"ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் 2-8-7
இலக்கியம்
ஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)
விளக்கம்
ஏ < ஏற்றம் < ஏறு
[தொகு]மொழிபெயர்ப்பு
greatness (ஆங்கிலம்)
பிறமொழி
பயன்பாடு
(எ.கா.) ' அங்க பார்!.' - ' hey, look there ! '

 பொருள்
  1. 9 ஆம் உயிரெழுத்து
  2. தலைவன்
  3. அழகு
  4. ஐந்து
  5. ஐயம்
  6. வியப்பு,
  7. மெல்ல = பைய.
[தொகு]மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the ninth tamil vowel
  2. leader
  3. beauty
  4. five
  5. doubt
விளக்கம்
1) திருக்குறள் எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.
2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
3) சிலப்பதிகாரம்
  • ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)
  • பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)
4) அகநானூறு
பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு யெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305)
5) தேவாரம்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.)
6) பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம்.)

(ஐகாரக் குறுக்கம்), (), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).

[தொகு]உரிச்சொல்

பொருள்
வியப்பு
இலக்கணம்
"ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88
இலக்கியம்
"ஐதே காமம்" - நற்றிணை 143
[தொகு]மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. astonishmentawe
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், பத்தாமெழுத்தாகும்.
 பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • 1) the eleventh tamil vowel, 2) oh = oooh = ohhh. ஆங்கிலம்
பயன்பாடு
- (எ.கா.) ' , அப்படியா!.' - ' oh!' (used to express understanding of a statement)

  • ஓ என்பது தமிழில் வரும் இடைச்சொற்களில் ஒன்று
  • இச்சொல் 6 பொருள்களில் வரும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (இடையியல் 8)
  1. பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
  2. வினா - அவன் அவனோ
  3. எதிர்மறை - யானோ கொண்டேன்
  4. ஒழியிசை - கொளலோ கொண்டான்
  5. தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
  6. சிறப்பு - ஓஒ பெரியன்

 பொருள்.
  • எழுத்து
மொழியிறுதியில் வராது.
"க வ வோடு இயையின் ஔவும் ஆகும் (தொல்காப்பியம் 1-2-37)
கௌ = கௌவு, வாயால் கௌவிக்கொள்
வௌ = வௌவு, கையால் எடுத்துக்கொள்
  • இடைச்சொல்
தொல்காப்பியம் 2-7-33 குறிப்பின் இசைக்கும்போது பொருள் புலப்படும்.
  • ஈரளபு இசைக்கும்
ஔ ஔ - ஒருவர் இறந்துவிட்டால் ஔ ஔ என்று வாயில் அடித்துக்கொள்வர்
  • அளபெடையுடன் வரும்
ஔஉ - வியப்புக் குறிப்பின் இசை
  • அளபெடை இன்றி வரும்
ஔ - வலி தோன்றும் குறிப்பிசை
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், 12வது எழுத்தாகும்
விளக்கம்.
  • ( இலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தில் தொடங்கும், எந்தவொரு சொல்லும் திருக்குறளில்லை.