பல இருள்களில் கழிந்துபோன
என் இரவுகள்..
தனிமைக்கு
இரையாகிப் போனதன்
மிச்சமே!
உறங்கா நிலையில்
கண்ட கனவுகள்
தொலைத்த
தொடு உணர்வுகள்..
அவளைத் தேடும்!
நினைவுகளில் அடங்கி
நெஞ்சுக்குள் பதிந்துபோன
அவள் உருவம்
என் சுவாசத்தில் -அவள்
மூச்சுக்காற்றின்
வெம்மையில் தகிக்கும்
என் தேகம்!!
வலி கொண்ட நெஞ்சம்
அவளைத் தேடி
அவள் நினைவால்
உயிர் சுகம் கண்டது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக