திங்கள், 5 மார்ச், 2012

நட்பு


நட்பு 
என்பது அழகானது.
உயர்ந்த நட்பிற்கு
ஆண்-பெண் பேதமில்லை.
இப்படிபட்ட நட்பு,
சாதனை பல நிகழ்த்தும் வல்லமை படைத்தது. 
உள்ளத்தின் தூய உணர்வுகளை மட்டுமே பெற்று வளரக்கூடிய நட்பு,
வாழ்க்கையில் பல வெற்றிகளை தேடித்தரும்.

பொருட்பால்
நட்பியல்
நட்பு

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

கலைஞர் உரை:
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

மு.வ உரை:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்குஅருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்புஎன்னும் தோழமையைக் கொடுக்கும்.

Translation:
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.

Explanation:
Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக