அ

[தொகு]ஓரெழுத்து ஒரு மொழி
உயிரெழுத்து
அ = 8
8 என்பதன்கைக் குறி
பொருள்
(பெயர்ச்சொல்): அ
1) தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து ,
2) எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு,
3) அழகு,
4) அந்த என்னும் சுட்டு) (எ.கா. அப்பறவை, அக்கருவி)
5) எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிகளிலிருந்து பெற்ற பிற்கால அமைப்பு; ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
6) ஓர் அசைச்சொல். (எ.கா.)(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி-494)
7) ஓர் இரக்கக் குறிப்பு.(எ.கா.) ' அஆ! கீழே கொட்டி விட்டதே. '8) ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று. (எ.கா.) என கைகள்.
9) அஃகான்.
10) சிவன், திருமால்.
இந்தி- இதே ஒலியை உடைய இந்தியின் முதலெழுத்து - अ
விளக்கம்
ஆரிய மொழிகளிலிருந்து பெற்ற "அ" என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே வழங்குவது;
சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்.
1.நீதி X அநீதி
2.சைவம் X அசைவம்
3.சுத்தம் X அசுத்தம்
4.தர்மம் X அதர்மம்
பயன்பாடு:
அ என்பது தமிழின் முதலாம் உயிரெழுத்து ஆகும்.
(இலக்கணப் பயன்பாடு)
அ என்பது, ஒரு பெயர்ச்சொல், அசைச்சொல், மற்றும் குறில் ஆக அமைகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
அ என்ற சொல்லால் ஆரம்பமாகும் திருக்குறள்கள், மொத்தம் = 156.
இது தமிழ் அரிச்சுவடியில் அடங்கும், அடிப்படைக் குறியீடாகும்.
*****************************
”ஆ”

பொருள்:
1.இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.
2.பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
3.வலிக்கான குறிப்பொலி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்:
(ஆங்):
the second tamil vowel
cow
oh!
(இந்தி):
आ- ஆஒலியிலான, இந்தியின் இரண்டாவது உயிர்எழுத்து ஆகும்.
गो, गौ, गाय
आह, हा (குறிப்பொலி)
விளக்கம்:
• • (இலக்கணக் குறிப்பு)இது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
• • ஆவின் பால் = பசுவின் பால்.
• • இது தமிழ் அரிச்சுவடியில் உள்ளது.
• • ஆ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =21
***
"இ"

பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், மூன்றாமெழுத்தாகும்.
விளக்கம்.
- (லக்கணக் குறிப்பு)-இ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- இ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =113 .அவற்றினை இங்கு காணலாம்.
***
ஈ

பொருள்.
- அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.
- வண்டு.
- அழிவு.
- தேனீ
- அம்பு
- அரைநாள்
- பாம்பு
- கொடு
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும்.
விளக்கம்.
- (லக்கணக் குறிப்பு)-ஈ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- ஈ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =8 .அவற்றினை இங்கு கா
உ
பொருள்.
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில்,ஐந்தாமெழுத்தாகும்.
விளக்கம்.
- ( இலக்கணக் குறிப்பு)-உ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- உ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =81
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஆறாமெழுத்தாகும்; மூன்றாவது நெடில் உயிரெழுத்து (ஆ, ஈ, ஊ)
- ஊ < ஊன் "ஊன்உடம்பு ஆலயம்" - திருமந்திரம் (ஒப்புநோக்குக ஆ < ஆன், கோ < கோன், மா < மான்)
- (
லக்கணக் குறிப்பு)-ஊ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- ஊ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் = 21 .
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஏழாமெழுத்தாகும்.
- (
லக்கணக் குறிப்பு)-எ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- எ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =45.
- (
- ஏ என்பது, உயிர் எழுத்துக்களில், 8வது எழுத்தாகும்.
- ஏ = அம்பு (பெயர்ச்சொல்)
- ஏ = ஏவு (வினைச்சொல்)
- ஏ - (இடைச்சொல்)
- ஏ = பெருமை "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)
- ஏ என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.
மொழிபெயர்ப்புகள்
- the eighth tamil vowel,
- arrow
- activate
- an addenda in nouns to express the moods of certainty, questioning, negative, clarity, threatening, counting,
- the greatness
- hey.
விளக்கம்
[தொகு]இடைச்சொல்
- ஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)
- ஈற்றசை
- கடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)
- எண்
- நிலனே நீரே தீநே வளியே வெளியே
- தேற்றம்
- அவனேஎ கொண்டான்
- பிரிநிலை
- அவனே கொண்டான்
- வினா
- நீயே மொண்டாய்?
- தெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13
- நீயேஎ கொண்டாய்
- எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40
- தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப
- எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42
- சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.
- ஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
- அன்று ஈற்று ஏ - அன்றே அன்றே
- ஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
- நன்று ஈற்று ஏ - நன்றே நன்றே
- ஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24
- ஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே
- ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38
- கடல்போல் தோன்றல காடு இறந்தோரே
[தொகு]உரிச்சொல்
- பொருள்
-
- பெற்று என்னும் பெருமை
- இலக்கணம்
-
- "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் 2-8-7
- இலக்கியம்
-
- ஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)
- விளக்கம்
-
- ஏ < ஏற்றம் < ஏறு
[தொகு]மொழிபெயர்ப்பு
-
- greatness (ஆங்கிலம்)
- பிறமொழி
- இந்தி மொழியின் ஏ = ऐ
பயன்பாடு
- (
லக்கணக் குறிப்பு) ஏ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகையினைச் சார்ந்ததாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஏ என்ற எழுத்தினால் ஆரம்பமாகும் திருக்குறள்கள் மொத்தம் =9. - இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- A = a = ஏ = ऐ ஆகியவற்றின் பலுக்கல்கள் ஒன்றே ஆகும். (எ.கா.) april , ஏரி.
- (
பொருள்
ஐ
[தொகு]மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு)-ஐ என்பது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில் இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில் சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை பெறும் (ஐகாரக் குறுக்கம்).
- (இலக்கியப் பயன்பாடு)
-
- 1) திருக்குறள்: ஐ எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.
- 2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
- 3) சிலப்பதிகாரம்
-
- ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)
-
-
- தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)
-
-
- பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
-
-
- ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)
-
-
- 4) அகநானூறு
-
-
- பகலிலும் அகலா தாகி யாமம்
-
-
-
- தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305)
-
-
- 5) தேவாரம்
- பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
- 5) தேவாரம்
-
-
- இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
-
-
-
- எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.)
-
-
- 6) பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம்.)
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- (பாட்டிசைப் பயன்பாடு) ஐ நெடிலாக மட்டுமல்லாமல் செவ்விசையில் ஓர் சுரமாகவும் உள்ளது. அய் அதற்கு மாற்றாகாது.
- (ஐகாரக் குறுக்கம்), (ஒ), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).
[தொகு]உரிச்சொல்
- பொருள்
-
- வியப்பு
- இலக்கணம்
-
- "ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88
- இலக்கியம்
-
- "ஐதே காமம்" - நற்றிணை 143
[தொகு]மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், பத்தாமெழுத்தாகும்.
- (
லக்கணக் குறிப்பு)-ஒ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- ஒ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =40.
- (
- இது தமிழின் உயிர் எழுத்துக்களில், 11வது எழுத்தாகும்.
- ஓ என்பது, இடைச்சொல்லாகவும் பயனாகிறது.
- சென்று தாக்குதல்.
- நீர் தாங்குப் பலகை.
- ஒரு இசைச் சொல்; ஓ என்று தொடங்கி பாடுதல்.
மொழிபெயர்ப்புகள்
- இந்தி மொழியின் 'ஓ' = औ
பயன்பாடு
- (
லக்கணக் குறிப்பு)-ஓ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
*ஓ என்ற எழுத்தினால்ஆரம்பமாகும் திருக்குறள்கள் மொத்தம் =5. - இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- O = o = ஓ = औ ஆகியவற்றின் பலுக்கல்கள் ஒன்றே ஆகும்.(எ.கா.) orangutan, ஓடு.
- (
- ஓ என்பது தமிழில் வரும் இடைச்சொற்களில் ஒன்று
- இச்சொல் 6 பொருள்களில் வரும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (இடையியல் 8)
- பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
- வினா - அவன் அவனோ
- எதிர்மறை - யானோ கொண்டேன்
- ஒழியிசை - கொளலோ கொண்டான்
- தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
- சிறப்பு - ஓஒ பெரியன்
பொருள்.
- எழுத்து
- மொழியிறுதியில் வராது.
- "க வ வோடு இயையின் ஔவும் ஆகும் (தொல்காப்பியம் 1-2-37)
- கௌ = கௌவு, வாயால் கௌவிக்கொள்
- வௌ = வௌவு, கையால் எடுத்துக்கொள்
- இடைச்சொல்
-
- தொல்காப்பியம் 2-7-33 குறிப்பின் இசைக்கும்போது பொருள் புலப்படும்.
- ஈரளபு இசைக்கும்
- ஔ ஔ - ஒருவர் இறந்துவிட்டால் ஔ ஔ என்று வாயில் அடித்துக்கொள்வர்
- அளபெடையுடன் வரும்
- ஔஉ - வியப்புக் குறிப்பின் இசை
- அளபெடை இன்றி வரும்
- ஔ - வலி தோன்றும் குறிப்பிசை
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், 12வது எழுத்தாகும்
விளக்கம்.
- ( இலக்கணக் குறிப்பு)-ஔ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- ஔ என்ற எழுத்தில் தொடங்கும், எந்தவொரு சொல்லும் திருக்குறளில்லை.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக