சிட்டுக்குருவிகள்
கொஞ்சல்மொழிகேட்டு
புலரும் பொழுது..
சோம்பல் முறித்தெழுந்த
பகலவனோடு தென்றலும்
பூமணம் வீசி
எட்டுத்திக்கும் சென்றாலும்
வழிமாறி செல்லாமல்
வந்தே செல்லும்
என் வீட்டுத் தோட்டத்திற்கும்...
இவைசெல்லும் வழியெங்கும்
பின்தொடர்ந்தாலும்
விட்டுச்செல்லும் சுகந்தம்
எனைத் ஹ்டோட்டும் சென்றிடும்..
கரும்புக்காட்டின் மேலே
மின்கம்பம், கம்பிகளுக்கிடையே
கலைவண்ணம் மிகக்
கட்டியிருக்கும்
தூக்கணாங்குருவிக் கூடு..
கரும்பின் பூ வீசும்
கொள்ளை அழகிலே
சிறகுவிரித்து பறக்கும்
பறவை என்றேன்னியே
காதல் மொழிகொண்டு
கவிதைபேசிடும் குருவியும்..
வீட்டருகிலே..,
இடிந்துபோன வீட்டில்
குடியிருந்திடும்..
கூடுகட்டி அந்த அழகு
சிட்டுக்குருவி..
ஆயாவின்
சேலைகட்டி கிணற்றிலே
நீச்சல் பழகியிருந்தாலும்
கிணற்றுக் கற்படியை பிடித்தே
நீந்தியிருப்போம்..
இட்டிலித் தட்டிலே,
மாவோடே வெந்திருந்தாலும்
ஒருநாளும்
இட்டிலியோடு வந்ததில்லை
தாத்தாவின் பழம்வேட்டி..
சமையலரைக் கொட்டாயின்
சருகுகளும் புகைபிடிக்கும்..
சிறார்கள் கவ்விவிடும்
பனிப்புகைபோல்..
எம்மை விட்டு இன்னும்அகலவில்லை..
என்சிறு பால்யத்தின் ஞாபகம்..
நீளும்..
கொஞ்சல்மொழிகேட்டு
புலரும் பொழுது..
சோம்பல் முறித்தெழுந்த
பகலவனோடு தென்றலும்
பூமணம் வீசி
எட்டுத்திக்கும் சென்றாலும்
வழிமாறி செல்லாமல்
வந்தே செல்லும்
என் வீட்டுத் தோட்டத்திற்கும்...
இவைசெல்லும் வழியெங்கும்
பின்தொடர்ந்தாலும்
விட்டுச்செல்லும் சுகந்தம்
எனைத் ஹ்டோட்டும் சென்றிடும்..
கரும்புக்காட்டின் மேலே
மின்கம்பம், கம்பிகளுக்கிடையே
கலைவண்ணம் மிகக்
கட்டியிருக்கும்
தூக்கணாங்குருவிக் கூடு..
கரும்பின் பூ வீசும்
கொள்ளை அழகிலே
சிறகுவிரித்து பறக்கும்
பறவை என்றேன்னியே
காதல் மொழிகொண்டு
கவிதைபேசிடும் குருவியும்..
வீட்டருகிலே..,
இடிந்துபோன வீட்டில்
குடியிருந்திடும்..
கூடுகட்டி அந்த அழகு
சிட்டுக்குருவி..
ஆயாவின்
சேலைகட்டி கிணற்றிலே
நீச்சல் பழகியிருந்தாலும்
கிணற்றுக் கற்படியை பிடித்தே
நீந்தியிருப்போம்..
இட்டிலித் தட்டிலே,
மாவோடே வெந்திருந்தாலும்
ஒருநாளும்
இட்டிலியோடு வந்ததில்லை
தாத்தாவின் பழம்வேட்டி..
சமையலரைக் கொட்டாயின்
சருகுகளும் புகைபிடிக்கும்..
சிறார்கள் கவ்விவிடும்
பனிப்புகைபோல்..
எம்மை விட்டு இன்னும்அகலவில்லை..
என்சிறு பால்யத்தின் ஞாபகம்..
நீளும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக